கிம் ஜான்-உனுக்கு 24 குதிரைகளை பரிசாக அனுப்பிய ரஷ்ய ஜனாதிபதி புடின்
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பெருமளவில் ஆயுத உதவிகளை வழங்கி வரும் வடகொரியாவுக்கு புடின் பரிசுகளை அனுப்பி வருகிறார்.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து ஒரு புதிய குதிரை தொகுப்பைப் பரிசாக பெற்றுள்ளார்.
இது அவருக்கும் ரஷ்ய ஜனாதிபதி அதிபர் விலாடிமிர் புதினுக்கும் இடையிலான உறவு வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது.
ரஷியாவின் Primorsky Krai என்ற பகுதியின் கால்நடை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, 24 குதிரைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான குறுகிய நில எல்லையை கடந்து வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டன.
இந்த தொகுப்பு 19 ஆண் குதிரைகளையும் 5 பெண் குதிரைகளையும் கொண்டதாக உள்ளது.
இந்த குதிரைகள் "ஓர்லோவ் ட்ராட்டர்" (Orlov Trotter horses) இனத்தைச் சேர்ந்தவை, இவை கிம் ஜாங்-உனுக்கு பிடித்த இனமாகும். இது 2022-ல் Pyongyang-ற்கு அனுப்பப்பட்ட குதிரைகளுடன் ஒத்துப்போகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஓர்லாவோ டிராட்டர் குதிரைகள் கிம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. கிம் ஜாங்-உன் அவற்றின் மீது சவாரி செய்வதில் மகிழ்ச்சியடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.
கடந்த ஜூன் மாதத்தில், புதின் மற்றும் கிம் ஜாங்-உன் இருவரும் இருதரப்பினருக்குமான "முழுமையான கூட்டாண்மை ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டனர், இது இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்கு உறுதியளித்தது.
இதற்காக, புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலில் உத்தர கொரியாவுக்கு வருகை தந்தார். அப்போது இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கினர்.
கிம் ஒரு அரிய வகை நாய்களை புடினுக்கு பரிசளித்தார், புடின் கிம்முக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை அனுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia gifts 24 Orlov Trotter horses to North Korea, Kim Jong-un Vladimir Putin, Russia North Korea Relations