வடகொரியாவில் ஏவுகணைகளை பார்வையிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்: புடினுக்கு நன்றி தெரிவித்த கிம் ஜாங் உன்
போர் மற்றும் மோதல் போக்குகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை புதன்கிழமை பியோங்யாங்கில் சந்தித்தார்.
உலக அளவில் அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருவது பல்வேறு உலக நாடுகளை பொருளாதார சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
இதற்கிடையில் சீனா மற்றும் தைவான் இடையே எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
KCNA via REUTERS
மேலும் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான மோதல் போக்கு, இதன் காரணமாக வட கொரியா மேற்கொண்டு வரும் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனை போன்றவை சமீபத்தில் உலகில் அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
செர்ஜி ஷோய்கு வட கொரியாக்கு சுற்றுப்பயணம்
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் முக்கிய சில உலக நாடுகள் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் இந்த வேளையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு பியோங்யாங்கில் புதன்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னை நேரில் சந்தித்தார்.
KCNA via REUTERS
அத்துடன் ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய அமைச்சர் செர்ஜி ஷோய்குவிற்கு, பியோங்யாங்கின் தடை செய்யப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய இராணுவ ஆயுத கண்காட்சியை சுற்றி காண்பித்தார். அப்போது இரண்டு தரப்பினர்களும் உறவுகளை வலுப்படுத்த உறுதியளித்தார் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி புடின் அளித்த கடிதத்தை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் அமைச்சர் செர்ஜி ஷோய்கு வழங்கினார்.
KCNA via REUTERS
இதற்கு பதிலாக அமைச்சர் செர்ஜி ஷோய்கு தலைமையில் பியாங்யாங்கிற்கு தூதுக்குழு அனுப்பியதற்காக ஜனாதிபதி புடினுக்கு வட கொரிய அதிபர் கிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கொரிய போரின் 70 ஆண்டு கால நிறைவை குறித்து இந்த வாரம் வட கொரியா அதன் வெற்றி விழாவை கொண்டாடி வருகிறது, இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய தூதுக்குழு, சீன தூதுக்குழு ஆகியவை வடகொரியாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
KCNA via REUTERS