வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்து தெரிவித்த மன்னர் சார்லஸ்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பலரும் வெறுக்கும் அல்லது தவிர்க்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பலரும் தவிர்க்கும் நபர்
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அணு ஆயுத சோதனை, அல்லது தன் நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் ராணுவ அணி வகுப்பு என எதையாவது செய்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் வட கொரிய ஜனாதிபதியை கரித்துக்கொட்டுபவர்கள் நிறையபேர்.
அதிலும், இப்போது உக்ரைன் போர் மும்முரமாக நடந்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினை வேறு கிம் சென்று சந்திக்க, பல தலைவர்களுடைய எரிச்சல் அதிகமாகியுள்ளது.
மன்னர் சார்லஸ் வாழ்த்து
இப்படிப்பட்ட சூழலில், மன்னர் சார்லஸ் கிம் ஜங் உன்னுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வட கொரியா நாடு உருவானதன் 75ஆவது ஆண்டு விழாவை நேற்று அந்நாடு கோலாகலமாக கொண்டாடியது. அதற்காகத்தான் மன்னர் சார்லஸ் கிம்முக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
மன்னர் அனுப்பிய செய்தி
மன்னர் சார்லஸ், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தைக் கொண்டாடிவரும் நிலையில், நான் எதிர்காலத்துக்கான எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |