மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமரான கே.பி.சர்மா ஒலி
நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி (K P Sharma Oli) மீண்டும் பதவியேற்கிறார்.
கே.பி.சர்மா ஒலி (76) தலைமையில் மற்றொரு கூட்டணி அரசு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.
KP சர்மா ஒலி முன்பு நேபாளத்தின் பிரதமராக அக்டோபர் 11, 2015 முதல் ஆகஸ்ட் 3, 2016 வரையிலும், பிப்ரவரி 5, 2018 முதல் ஜூலை 13, 2021 வரையிலும் பதவி வகித்துள்ளார்.

நேபாள மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமால் தஹல் பிரசந்தா பிரதமராக வெள்ளிக்கிழமையன்று பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கையை இழந்தார்.
நேபாள அரசியலமைப்பின் பிரிவு 76 (2) இன் படி, KP சர்மா ஒலி புதிதாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) மற்றும் நேபாளி காங்கிரஸ் (NC) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்.
நேபாளத்தின் அடுத்த பிரதமராக கே.பி.சர்மா ஒலியை நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பாடேல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியமித்தார்.
கேபி சர்மா ஒலியுடன் புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
K P Sharma Oli was appointed Nepal's Prime Minister for the third time