ஆற்றில் தெரிந்த பெண்ணின் கால்கள்... யாரோ நீந்துவதாக நினைத்த நபர்: உண்மை தெரியவந்தபோது
இந்தோனேசியாவில் ஆற்றின் மீது அமைந்திருந்த பாலத்தில் கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார் ஒருவர்.
அப்போது, ஆற்றில் ஒரு பெண்ணின் கால்கள் தெரிய, யாரோ நீந்துவதாக அவர் நினைத்துள்ளார். ஆனால், அந்தப் பெண் நீந்தவில்லை!
ஆற்றில் தெரிந்த பெண்ணின் கால்கள்...
இந்தோனேசியாவிலுள்ள வாலி ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தில் கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்த அலி (Ali Rahangmetan), ஆற்றில் ஒரு பெண்ணின் கால்கள் தெரிவதை கவனித்துள்ளார்.
அவர் யாரோ நீந்துவதாக முதலில் நினைத்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தண்ணீருக்குள் போராடுவதுபோலத் தெரியவே, காரிலிருந்து இறங்கி என்ன நடக்கிறது என்று கவனித்துள்ளார்
உண்மை தெரியவந்தபோது...
அப்போதுதான் ஒரு முதலை ஒரு பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் செல்கிறது என அலிக்குப் புரிந்துள்ளது.
உடனடியாக பொலிசாருக்கு அவர் தகவலளிக்க, பொலிசார் வந்து அந்த முதலையை சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
அந்த முதலையின் உடலை வெட்டிப் பார்க்கும்போது, ஒரு மனித உடலை அது விழுங்கியிருந்தது தெரியவந்தது.
முதலையால் கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் -பெயர் ஹலிமா (Halima Rahakbauw, 54). ஹலிமா, ஆற்றில் சிப்பிகளை சேகரித்து ஆற்றோரமாக அமர்ந்து அவற்றை சமைத்துள்ளார்.
சமைத்தபின், அவர் பாத்திரங்களைக் கழுவுவதற்காக ஆற்றில் கால் வைக்க, காத்திருந்த 14 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத முதலை ஹலிமாவைத் தாக்கியிருக்கிறது.
தண்ணீருக்குள் அவரை இழுத்துச் சென்று, சுழற்றி, ஹலிமாவைக் கொல்லும்போதுதான், அலி அவரை கவனித்திருக்கிறார்.
இப்படி இந்தோனேசியாவில், அப்பாவி மக்கள் முதலைகளால் கொல்லப்படுவது இது முதல் தடவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |