உடல் எடையை சட்டென குறைக்கனுமா? காலையில் இந்த உணவை தொடர்ந்து சாப்பிடுங்க போதும்
பொதுவாக உடல் எடை குறைப்பில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பலரும் உடல் எடையை குறைக்க தினமும் உணவில் ஓட்ஸ் சேர்க்க தொடங்கிவிட்டனர்.
தினசரி ஒருவரது காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உங்கள் உடல் எடை இழப்புக்கும் உதவும் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஓட்ஸ் உடல் எடையை குறைப்பு எவ்வாறு உதவுகின்றது என்று பார்ப்போம்.
எப்படி உதவுகின்றது?
ஓட்ஸில் ஊட்டச்சத்து மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, இதனால் நீங்கள் அதிகளவில் உணவு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படுகிறது.
மறங்கள் நாளை நீங்கள் ஒரு கப் ஓட்ஸ் உடன் தொடங்குவது உங்களை ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
ஓட்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமிருந்தாலும் புரத சத்து அதில் இல்லை, அதனால் காலை உணவில் ஓட்ஸ் உடன் சேர்த்து புரத சத்து நிறைந்த உணவையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
ஓட்ஸில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓட்ஸுடன் புரதம் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
மேலும் ஓட்ஸ் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
ஓட்ஸுடன் முட்டை, தயிர் அல்லது வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ் உணவில் பால் சேர்க்காமல் சாப்பிடுவது உடல் எடை இழப்புக்கு நல்லது.
மேலும் இதில் கொழுப்பு நிறைந்த அல்லது இனிப்பு நிறைந்த டாப்பிங்க்ஸை சேர்த்து கொள்வதை தவிர்ப்பது உடல் எடை குறைப்பவருக்கு பயன் தரும்.