பல மில்லியன் தொகை பரிசு... நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வென்றதில் முறைகேடு? வெடித்த சர்ச்சை
433 லொட்டரி டிக்கெட்டில் ஒரே போன்ற 6 இலக்கங்கள், வெற்றி பெற்ற எண்கள் அனைத்தும் ஒன்பதன் பெருக்கல்கள்
ஒரே இலக்கத்தில் பல நூறு பேர்களுக்கு பரிசு கிடைத்துள்ளதால், மக்களுக்கு இதன் உண்மை பின்னணியை விளக்க வேண்டும்
ஒரே இலக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பல மில்லியன் தொகை பரிசை அள்ளிய லொட்டரி தொடர்பில் தற்போது முறைகேடு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 3.5 மில்லியன் பவுண்டுகள் தொகை பரிசாக வென்றதை நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் முறையிட்டுள்ள நிலையில், உரிய விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Credit: Philippine Charity Sweepstakes
பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசாங்கம் முன்னெடுக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று திங்களன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் டசின் கணக்கானோர் தங்களது பரிசு வென்ற லொட்டரியை பதிவு செய்ய வரிசையில் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 433 லொட்டரி டிக்கெட்டில் ஒரே போன்ற 6 இலக்கங்கள் காணப்பட்டதாகவும், வெற்றி பெற்ற எண்கள் அனைத்தும் ஒன்பதன் பெருக்கல்கள் எனவும் தெரியவந்தது.
மொத்தப்பரிசு தொகை 236 மில்லியன்ஸ் பிலிப்பைன் பெசோஸ் என்பதால், ஒவ்வொருவருக்கும் சுமார் 8,315 பவுண்டுகள் வரையில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Philippine Charity Sweepstakes
இந்த நிலையில் தான், குறித்த லொட்டரி விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி Aquilino Pimentel என்ற அரசியல்வாதி விசாரணை கோரியுள்ளார். அரசாங்கம் சார்பில் நடத்தப்படும் லொட்டரி என்பதால், இந்த சூதாட்ட விளையாட்டின் நேர்மையை நாம் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்றார்.
ஒரே இலக்கத்தில் பல நூறு பேர்களுக்கு பரிசு கிடைத்துள்ளதால், மக்களுக்கு இதன் உண்மை பின்னணியை விளக்க வேண்டும் என்பது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர்.
விசாரணை தொடர்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள லொட்டரி நிர்வாகம், நேரலை செய்யப்பட்ட பரிசறிவிக்கும் நிகழ்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.