அதிர்ச்சி சம்பவம்- மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது
மத்திய பிரதேசத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு ரயில் தடம் புரண்டது
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற ரயில் திடீரென தடம்புரண்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடம் புரண்டது சரக்கு ரயில் என்பதால் எந்தவித அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை, தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
@pratidintime
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜபல்பூரில் உள்ள ஷாபுரா பிடோனியில் நேற்று இரவு சரக்கு ரயிலின் எல்பிஜி ரேக் இரண்டு வேகன்கள் இறக்குவதற்கு வைக்கப்பட்டிருந்த போது தடம் புரண்டது. மெயின் லைனில் ரயில் இயக்கம் இயல்பாக உள்ளது என்றனர்.
சமீபத்தில் ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே நடந்த ரயில் விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Two wagons of LPG rake of a goods train derailed while being placed for unloading last night in Shahpura Bhitoni, Jabalpur of Madhya Pradesh. Train movement is normal in main line. Restoration work started after sunrise in the presence of siding authorities. Fitness… pic.twitter.com/F2StcFHDFi
— ANI (@ANI) June 7, 2023