அதிர்ச்சி சம்பவம் - மீண்டும் ஒடிசாவில் தடம் புரண்ட சரக்கு ரயில்
மீண்டும் ஒடிசாவில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் தடம் புரண்ட சரக்கு ரயில்
ஒடிசா மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உட்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் சுமார் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் இன்னொரு சம்பவம் மீண்டும் ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம், டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்திற்கும், ஏசிசி பார்கார் சிமெண்ட் ஆலைக்கும் இடையில் ரயில் தண்டவாளம் உள்ளது. இந்நிலையில், சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற ரயிலின் 5 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டது.
இந்த ரயில் தனியாருக்கு சொந்தமானது. ரயில்வேயுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News..
— INC TV (@INC_Television) June 5, 2023
Another train derails in Bargarh,Odisha. pic.twitter.com/tIoSMuVvmo