பெண்களாக மாறும் ஆண் உயிரினங்கள்: உலகில் ஏற்பட்டு வரும் ஆச்சரியமான ஆபத்து!
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் ஆண் உயிரினங்கள் பெண்களாக மாறும் ஆபத்தான அதிசயம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பெண்ணாக மாறும் உயிரினம்
புவி வெப்பமயமாதலால் காலநிலை மாற்றம் மற்றும் திடீர் இயற்கை பேரிடர்கள் போன்றவை மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இந்த பருவ நிலை மாற்றமானது மனிதர் மட்டுமில்லாது உயிரனங்களையும் பெரிதும் அபாயத்தில் தள்ளியுள்ளது.
அதிலும் சில உயிரினங்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்த பருவநிலை மாற்றம் பாதித்துள்ளது.
Male Central Bearded Dragons have ZZ Chromosomes and females have ZW
— AnimalFactHub (@AnimalFactHub) December 15, 2021
A 2015 study showed that if eggs are incubated at temperatures above 32°C genetically male babies will be born female
Meaning in the future this species could go extinct due to not having enough males pic.twitter.com/WnHgOWepkh
அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள சென்ட்ரல் பியர்டட் ட்ரேகன்ஸ் (central bearded dragons) என்ற ஊர்வன பல்லிகள் இனம் குறிப்பிடத்தக்க வெப்ப நிலைக்கு மேல் அடைக்காக்கப்பட்டால் முட்டைகளில் உள்ள குஞ்சுகள் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் பெண் உயிரினமாக மாறிவிடுமாம்.
இதைப்போன்றே சில ஊர்வன வகை உயிரினங்களின் பாலினத்தை வெப்பநிலை பகுதி அளவு தீர்மானிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து பூமியின் வெப்பம் அதிகரித்து வந்தால் உயிரினங்களில் உள்ள ஆண்கள் எல்லாம் பெண்களாக மாறி குறிப்பிட்ட இனமே இல்லாமல் அழிந்து விடும் என அறிவியலாளர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இருளை நோக்கி பயணிக்கும் பூமி
பொதுவாக மேகங்களே ஒரு கண்ணாடி போல செயல்பட்டு சூரிய ஒளியை பிரதிபலிக்கும், ஆனால் தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தாழ்வான மேகங்கள் குறைந்து வருகின்றன.
இந்த மேகங்கள் இவ்வாறு குறைந்து கொண்டே போனால் உலகின் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
australian green sea turtle- ஆஸ்திரேலிய பச்சை கடல் ஆமை(Shutterstock)
அதே போல பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற பசுமை வாயுக்களால் மீன்கள் வாசனை சக்தியை இழந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புவி வெப்பமயமாதால் உலகின் உணவு சங்கிலி தொடரும் முற்றிலுமாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.