சாவியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபர்: வீட்டை உடைக்க முயன்ற உயிரிழந்த பரிதாபம்
ரஷ்யாவில் வீட்டிற்குள்ளேயே வீட்டுச் சாவியை வைத்து பூட்டிய நபர் ஒருவர், வீட்டை உடைக்க முயன்று போது பரிதாபமாக உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபர்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் டிசம்பர் 15ம் திகதி தனது செல்ல நாயை நடை பயிற்சிக்கு அழைத்து சென்ற 49 வயது நபர், மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் சாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.
GUBERNATOROVA
இதையடுத்து அண்டை வீட்டாரின் பால்கனி வழியாக கீழே இறங்கி, தனது வீட்டு பால்கனி கதவை உடைத்து சாவியை எடுக்க அந்த நபர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது நண்பரை கார் கேபிளை எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று ரஷ்ய பத்திரிக்கை எம்.கே செய்தி வெளியிட்டுள்ளது.
மூச்சுத்திணறி இறப்பு
எம்.கே பத்திரிக்கை இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், உயிரிழந்த நபர், தனது வீட்டிற்குள் குதிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் இருக்கும் நபரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
iStockphoto
அவரும் சம்மதிக்க, நண்பன் கொண்டு வந்த கார் கேபிளை இடுப்பில் கட்டிக் கொண்டு நான்காவது மாடியில் இருந்து அந்த நபர் இறங்கியுள்ளார்.
அப்போது மூன்றாவது தளத்தின் ஜன்னலில் கயிறு சிக்கி கொண்டதை தொடர்ந்து, நடுவழியில் சிக்கி கொண்ட அந்த நபர் அந்தரத்தில் தொங்கி கொண்டு மூன்றாவது தளத்தில் உள்ள நபரை உதவிக்காக அழைத்துள்ளார், ஆனால் மூன்றாவது தளத்தில் இருந்து யாரும் வராததால் மிகப் பெரிய சிக்கலில் சிக்கி கொண்டார்.
நடுவழியில் தொங்கிய நபருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதை உணர்ந்த அருகில் உள்ளவர்கள், உடனடியாக அவசர சேவையை அழைத்துள்ளனர்.
iStockphoto
சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவை பிரிவினர் கயிற்றில் தொங்கிய நபரை மீட்டனர், ஆனால் அவர் ஏற்கனவே மூச்சுத்திணறால் உயிரிழந்து விட்டார் என்று அறிவித்தனர்.