1500 பெண்களை புகைப்படம் எடுத்த நபர் - செல்போனைப் பார்த்து அதிர்ந்து போன பொலிஸார்!
1500 பெண்களை புகைப்படம் எடுத்த நபரை பொலிஸார் பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நடந்து சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்த நபர்
தேனி அருகே பள்ளி மாணவிகள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்களைப் போட்டோ எடுத்து சேமித்து வைத்திருந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ராயப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சித்ரா. இவர் சாலையில் சென்றுக்கொண்டிருக்கையில், ஜெயச்சந்திரன் என்பவர் தன் போனில் சித்ராவை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைப் பார்த்ததும் சித்ரா கணவர் முருகனிடம் சென்று கூறியுள்ளார். உடனே முருகன், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனை அழைத்து அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தபோது, சித்ராவின் படங்கள் இருந்தது. அப்போது, இருவருக்குள் சண்டை வரவே, ஜெயச்சந்திரன் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அதிரடி கைது
இதனையடுத்து முருகன் காவல் நிலையத்திற்கு சென்று ஜெயச்சந்திரன் மீது புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெயச்சந்திரனை அழைத்து செல்போனை சோதனை செய்தனர்.
அப்போது, பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் செல்போனில் ஏராளமான பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், சாலையில் செல்லும் பெண்கள் என 1500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்துள்ளன.
போலீசார் ஜெயச்சந்திரனிடம் இது குறித்து விசாரணை செய்கையில், பொழுது போக்கிற்காக பெண்களைப் போட்டோ எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த படங்களை வைத்து ஏதாவது மார்பிங் செய்து தவறாக இணையதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளாரா என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |