வெள்ளத்திற்கு மத்தியில் சாக்ஸபோனிஸ்டின் உக்ரைனின் தேசிய கீதம்: வைரல் வீடியோ
கெர்சன் நகரின் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டின் மாடியில் நின்று கொண்டு ராணுவ உடை அணிந்த நபர் ஒருவர் சாக்ஸபோனில் உக்ரைனின் தேசிய கீதம் வாசிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
உச்சம் தொடும் உக்ரைன் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை சமீபத்திய நாட்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக பதிலடி தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யாவும் பல சூழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கெர்சன் நகரில் உள்ள ககோவ்கா(Kakhovka) அணையில் தாக்குதல் நடத்தினர்.
Saxophonist plays the anthem of Ukraine on the roof of a flooded house in #Kherson
— NEXTA (@nexta_tv) June 14, 2023
Andrii Levishchenko was rescuing people on his boat after the dam at the #KakhovkaHPP collapsed.
The author of the behind-the-scenes video said it was "the best performance of her life," to which… pic.twitter.com/95zaGuhcmE
இதில் கெர்சன் நகரின் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியது, அத்துடன் இதில் நூற்றுக்கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியது.
வைரல் வீடியோ
இந்நிலையில் வெள்ளத்தால் சூழப்பட்ட கெர்சன் நகரில் ராணுவ உடை அணிந்த நபர் ஒருவர் வீடு ஒன்றில் மேல் நின்று கொண்டு சாக்ஸபோனில் உக்ரைனின் தேசிய கீதம் வாசிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த காட்சிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்த Andrii Levishchenko படமாக்கினார்.
இந்த அவரது வாழ்க்கையின் சிறந்த படைப்பு என்று திரைக்கு பின்னால் உள்ள கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் வாழும் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது, என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.