டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் நான் இறந்திருக்க வேண்டியது: உயிர்தப்பிய நபர் கூறிய விடயம்
உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் செல்லாமல் உயிர் தப்பியது குறித்து நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெடித்துச் சிதறிய கப்பல்
டைட்டானிக் கப்பல் விபத்திற்கு அருகில் டைட்டன் எனும் சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டைட்டன் கப்பலில் சிறிது நேரம் பயணம் செய்த யூடிபர் ஒருவர், அது வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கோளாறு காரணமாக தனது பயணம் ரத்தானதாக தெரிவித்துள்ளார்.
தன்னை 'புதையல் வேட்டையர்' என்று கூறிக்கொள்ளும் ஜேக் கோஹ்லர் எனும் யூடியூபர் ஒருவர், டைட்டன் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அதில் பயணிக்க இருந்துள்ளார். ஆனால், சில கோளாறுகள் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வடக்கு அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதிக்கு 13,000 அடி ஆழத்தில் டைவ் செய்ய இருந்த அவரது திட்டம் செயல்படாமல் போனது.
பயணம் ரத்து
தகவல் தொடர்பு பிரச்சனைகள் மற்றும் கடுமையான வானிலை காரணமாக கடைசி நிமிடத்தில் கோஹ்லரின் பயணம் ரத்தாகியுள்ளது. எனினும் அவர் 3,000 அடியில் சோதனை டைவ் மட்டுமே அனுபவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'அதை பற்றி நினைக்கும்போது வேடிக்கையாக தான் இருக்கிறது. ஒருவேளை வானிலை தெளிவடைந்து, நிலைமைகள் சரியாக இருந்திருந்தால், நீங்கள் செல்கிறீர்களா என்று Stockton கேட்டிருந்தால் கண்டிப்பாக பயணித்திருப்பேன். ஆனால் என் விதி அவ்வாறு நடக்கவில்லை. அதனால் அதே நீர்மூழ்கி கப்பலில் ஐவருடன் சாகாமல் தப்பித்தேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |