ஏழே நாட்களில் ஏழு உலக அதிசயங்களை சுற்றி கின்னஸ் சாதனை! எப்படி சாத்தியமானது?
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஏழே நாட்களில், ஏழு உலக அதிசயங்களையும் சுற்றி, கின்னஸ் சாதனை படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக அதிசயங்கள்
பிரித்தானியாவை சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட் என்ற நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சாவலில் வெற்றி பெற்றுள்ளார்.
@instagram
இவர் முதலாவதாக சீனாவிலுள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டுள்ளார், பின்னர் இந்தியா வந்து தாஜ்மகாலை பார்த்துள்ளார்.
@instagram
அதன்பின்னர் ஜோர்டனில் உள்ள பெட்ரோ நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள மீட்பர் கிருஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனை
இவர் ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.
@instagram
இந்த சாதனையை முறியடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ பயணம் செய்துள்ளார்.
@instagram
மெக்டோனால்டின் இந்த சாதனை பயணத்திற்கு டிராவல் போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் சூப்பர் ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனை பயணத்தின் நோக்கம் ஆகும் என மெக்டோனால்டின் கூறியுள்ளார்.
@instagram