பிரித்தானிய அரசு அலுவலர்கள் மீது குறி: புடின் ஆதரவு ரஷ்ய அரசியல்வாதி எச்சரிக்கை
பிரித்தானிய அரசு அலுவலர்கள்தான் எங்கள் இலக்கு என புடின் ஆதரவு ரஷ்ய அரசியல்வாதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அரசியல்வாதி விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்ய முன்னாள் அதிபரும், பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவருமான Dmitry Medvedev, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவர் ஆவார்.
பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதால் ரஷ்ய தரப்பு கொந்தளித்துப்போயுள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்துவரும் ஆதரவை, ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போராக கருதுவதாக தெரிவித்துள்ளார் Dmitry Medvedev.
Credit: Getty
பிரித்தானிய அரசு அலுவலர்கள்தான் எங்கள் இலக்கு
Dmitry Medvedev ட்விட்டரில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இன்று பிரித்தானியா உக்ரைனின் கூட்டாளி போல செயல்படுகிறது, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகிறது. அது ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போருக்கு சமம் என தெரிவித்துள்ளார்.
Credit: East2West
ஆகவே, பிரித்தானியாவின் அரசு அதிகாரிகள், ரஷ்யாவின் இராணுவ இலக்காக கருதப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவால் அவர்கள் கொல்லப்படலாம் என சில்லிடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் Dmitry Medvedev.
Credit: PA