மதுபோதையில் மதுபான விடுதிக்கு தீ வைத்த நபர்: 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி
மெக்சிகோவில் மதுபான விடுதிக்கு தீ வைத்த நபரால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
போதையில் பெண்ணிடம் அத்துமீறல்
மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் நபர் ஒருவர் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறியதை தொடர்ந்து அவரை ஊழியர்கள் மதுபான விடுதியில் இருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து மதுபான விடுதிக்கு மீண்டும் வந்த அந்த நபர் மதுபான கூடத்திற்கு தீ வைத்துள்ளார்.
Reuters
சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சோனோரா மாநில வழக்கறிஞர்கள் இது தொடர்பாக வழங்கிய முதற்கட்ட தகவலில், சந்தேக நபர் தாக்குதலின் போது உச்சகட்ட போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |