சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும்: ஆட்சி கவிழ்ப்பை அடுத்து கெஞ்சிய நாட்டின் பிரதமர்
நைஜரில் ஜனநாயக முறையில் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ஒருவர், இராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர் சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை
மேற்கு ஆபிரிக்காவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடிப்பது மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பதவி பறிக்கப்பட்ட பிரதமர் Ouhoumoudou Mahamadou தற்போது பிரான்சில் உள்ளார்.
@AP
ஆட்சிக்கவிழ்ப்பின் காரணமாக எல்லைகள் மூடப்பட்டபோது அவர் சர்வதேச சந்திப்புகளுக்காக நாட்டிற்கு வெளியே இருந்தார். பிராந்தியத்தில் ஜனநாயகத்தை ஆதரிப்பதற்காக நைஜர் ஒரு கடையாணி சக்கரமாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சி கவிழ்ப்பு என்பது பேரழிவு என குறிப்பிட்டுள்ள பிரதமர், ஏற்கனவே கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
@epa
தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி
நைஜர் நாட்டினை பொறுத்தமட்டில் 300,000 அகதிகளும், மாகாணம் விட்டு புலம்பெயர்ந்த மக்களுமே அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் தான் ரஷ்யாவை ஆதரிக்கும் குழு ஒன்று தற்போது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுத்துள்ளது.
மேலும் ஜனநாயக முறைப்படி, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும் கடந்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு தலைவர்கள் வெளியேற்றினர். நைஜரின் அரசியலமைப்பு என்பது பிரதமரை நியமிக்கும் அதிகாரம் உட்பட பரந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
@reuters
இதனிடையே, மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைப்பான ECOWAS ஞாயிற்றுக்கிழமை நைஜருக்கு எதிராக பயண மற்றும் பொருளாதார தடைகளை அறிவித்தது.
இந்த நிலையில், செவ்வாயன்று பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதாக அறிவித்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |