ஜோ பைடனிடம் வங்காளதேசத்தில் சிறுபான்மையினர், இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்தேன் - பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் உக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தலைவர்களுடன் ஆலோசனை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு சென்ற மோடி அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் (Joe Biden) தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் பேசிய விடயங்கள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்
அவரது பதிவில், "இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினேன். உக்ரைனின் நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் திரும்புவதற்கு, இந்தியாவின் முழு ஆதரவை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
வங்காளதேசத்தின் நிலைமையை நாங்கள் விவாதித்தோம். மேலும் இயல்புநிலையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினோம். மேலும் வங்காளதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம்" என கூறியுள்ளார்.
முன்னதாக, உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த இந்தியா தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |