உக்ரைன் பயணத்தை பற்றி புதினிடம் பேசிய மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேசினேன் என்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மோடி பதிவு
சமீபத்தில் அரசுமுறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றார். அப்போது, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உரையாடினர்.
இந்நிலையில் தான் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் போர் தொடர்பான என்னுடைய பார்வைகள், சமீபத்தில் மேற்கண்ட உக்ரைன் பயணம் குறித்து உரையாடினோம்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் போரை கைவிட்டு அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |