ரூ.50 சம்பளத்தில் தொடங்கி, ரூ.25,000 கோடி ஹோட்டல் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழிலதிபர்
ரூ.50 சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கி, ரூ.25,000 கோடி மதிப்பிலான ஹோட்டல் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழிலதிபரின் வெற்றிக் கதை இது.
உலகப்புகழ் பெற்ற ஓபெராய் ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ் பிராண்டின் பின்னணியில் மோகன் சிங் ஓபெராய் என்பவரின் உழைப்பும் விடாமுயற்சியும் உள்ளன.
பாகிஸ்தானில் தொடங்கிய வாழ்க்கை
மோகன் சிங் ஓபெராய், இன்று பாகிஸ்தானில் உள்ள ஜெலம் பகுதியில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததால், குடும்பப் பொறுப்பு அவர்மேல் வந்து சேர்ந்தது.
தனது வாழ்க்கையை நடத்த, உறவினர் ஒருவரின் காலணி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். ஆனால், இந்தியாவின் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கலவரங்களில் தொழிற்சாலை மூடப்பட்டது.
இந்தியாவில் புதிய தொடக்கம்
பாகிஸ்தானை விட்டுவிட்டு, ஓபெராய் இந்தியாவின் ஷிம்லா நகரத்திற்கு வந்தார். அங்கு Cecil ஹோட்டலில் வரவேற்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
மாதம் ரூ.50 சம்பளத்திற்காக வேலை செய்தாலும், அவரது உறுதி, நேர்மையும், அவருடைய மேலாளரை மிகவும் ஈர்த்தது. அதனால், அவர் ஹோட்டலின் கணக்குகளை நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம் அத்துறையில் அனுபவம் பெற்றார்.
தனியார் ஹோட்டல் முதலீடாக மாறியது
காலம் கடந்தபோது, ஓபெராய் ஒரு சிறிய ஹோட்டலை நிர்வகிக்க வாய்ப்பு பெற்றார். இதுவே அவருடைய வாழ்க்கையில் பாரிய திருப்பமாக அமைந்தது.
1934-ஆம் ஆண்டு, தனது சேமிப்பையும், தன் மனைவியின் நகைகளை விற்று ஹோட்டலை வாங்கினார். இதுவே ஷிம்லாவில் உள்ள Clarkes Hotel. இது அவரின் முதலாவது சொந்த ஹோட்டலாக அமைந்தது.
இந்தியாவின் மிகப்பாரிய ஹோட்டல் வர்த்தகராக மாற்றம்
ஷிம்லா கிளார்க்ஸ் ஹோட்டலின் லாபம் மூலம், கொல்கத்தாவில் ஒரு பாரிய ஹோட்டலை வாங்கினார். மேலும், Associated Hotels of India (AHI) நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார்.
1943-ஆம் ஆண்டில், AHI நிறுவனத்தின் கட்டுப்பாட்டை பெற்றுக் கொண்டு, இந்தியாவின் மிகப்பாரிய ஹோட்டல் சங்கத்தின் உரிமையாளராக மாறினார்.
ஓபெராய் ஹோட்டல்களின் விரிவாக்கம்
1965-ஆம் ஆண்டு டெல்லியில் ஓபெராய் இன்டர்காண்டினென்டல் ஹோட்டலை தொடங்கினார். 1973-ஆம் ஆண்டில், மும்பையில் 35 மாடிகளைக் கொண்ட ஓபெராய் ஷெராட்டன் ஹோட்டலை திறந்தார்.
ஓபெராயின் தலைமையில் ஓபெராய் ஹோட்டல் குழுமம் 32 நாடுகளுக்கு விரிவடைந்தது. இந்தியா மட்டுமல்லாது, சீனா, ஐக்கிய ரபி அமீரகம், பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உலகத்தர சேவையுடன் பிரபலமானது.
வாழ்நாள் சாதனை விருது
உலகத் தரத்திலான விருந்தோம்பல் சேவையில் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக, மோகன் சிங் ஓபெராய்க்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
மோகன் சிங் ஓபெராய் 2002-ஆம் ஆண்டு 103-வது வயதில் உயிரிழந்தார்.
ஒரு சாதாரண தொழிலாளியாக வாழக்கையை ஆரம்பித்து, உலகப்புகழ்பெற்ற ஹோட்டல் மன்னனாக மாறிய அவரது பயணம், உழைப்பும், விடாமுயற்சியும் வெற்றிக்கு அடிப்படை என்பதை நிரூபிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |