சாலை வளைவில் கவிழ்ந்த மினி பேருந்து: மொராக்கோவில் 24 பேர் உயிரிழப்பு
மொராக்கோவில் மினி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மினி பஸ் கவிழ்ந்து விபத்து
மொராக்கோவின் அஜிலால் மத்திய மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பேருந்து ஒன்று சாலை வளைவில் திரும்பும் போது துரதிர்ஷ்டவசமாக கவிழ்ந்தது.
மினி பஸ் கவிழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
AFP
பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு டம்னேட் நகரின் வார சந்தைக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விபத்தின் போது பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.
தொடரும் சாலை விபத்துக்கள்
வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மொராக்கோவில் இது போன்ற சாலை விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக தெரிய வந்துள்ளது.
மொராக்கோவில் வருடத்திற்கு சாரசரியாக 3,500 சாலை உயிரிழப்புகள் மற்றும் 12,000 பேர் படுகாயம் அடைவதாக தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |