நாடொன்றில் 231 பேரை தாக்கியுள்ள அரிய நோய்: காரணம் புரியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ள மருத்துவர்கள்
பெரு நாட்டில், அரிய நோய் ஒன்று 231 பேரைத் தாக்கியுள்ள நிலையில், எதனால் அந்த நோய் உருவாகிறது என புரியாமல் மருத்துவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
உடலே உடலுக்கு எதிரியாகும் பிரச்சினை
சில நேரங்களில், மனித உடல் தனக்குத்தானே எதிரியாக மாறும் ஒரு அரிய பிரச்சினை ஏற்படுவதுண்டு. அதாவது, உடலுக்குள் நோய்க்கிருமிகள் ஏதாவது நுழைந்தால், அவற்றுக்கெதிராக மனித உடலின் செல்கள் சில போராடும்.
இது இயற்கை, இது நோயெதிர்ப்பு சக்தியின் ஒருவகை. ஆனால், சில நேரங்களில், மனித உடலிலுள்ள சில செல்களுக்கெதிராக வேறு சில செல்கள் போராடத் துவங்கும். அதை சுய நோயெதிர்ப்பு நோய் என்பார்கள்.
Credit: AFP
சில வகை ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினைகள் இத்தகைய நிகழ்வால் ஏற்படுபவைதான். அதே போன்ற ஒரு பிரச்சினைதான் பெரு நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி முதல், அந்நாட்டில் இதுவரை 231 பேர் Guillain-Barré Syndrome (GBS) என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், நான்கு பேர் உயிரிழந்துவிட்டார்கள். ஆகவே, பெரு நாட்டில் தேசிய மருத்துவ அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் திகைப்பு
சில வகை வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்குப் பின் இந்த GBS பிரச்சினை உருவாகலாம். இந்த பிரச்சினை ஏற்பட்டால், பாதத்தில் ஊசி குத்துவது போன்ற உணர்வு உருவாகி, அது கால்கள் வழியாக உடல் முழுவதையும் பாதிக்கலாம். பக்கவாதமும் ஏற்படலாம்.
Credit: Shutterstock
உடல் மரத்துப்போதல், சோர்வு, வலி, உடலை பேலன்ஸ் செய்வதில் பிரச்சினை போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதற்கிடையில், எதனால் இத்தனை பேருக்கு இந்த அரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமல் மருத்துவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு Campylobacter jejuni என்னும் கிருமியின் தொற்றைத் தொடர்ந்து இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பும் பெரு நாட்டில் இதேபோல் GBS பிரச்சினை உருவாக இந்த Campylobacter jejuni கிருமி காரணமாக அமைந்தது குறிப்பிடத்தகது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |