வட கொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனை: சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா மக்களுக்கு ஆபத்து
வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் சீனா மற்றும் ஜப்பானில் உள்ள ஆயிரக்கணக்கானோரை அணு கதிர்வீச்சு அபாயத்தில் தள்ளியுள்ளது.
ஏவுகணை சோதனை
வட கொரியா 2006 மற்றும் 2017க்கு இடையில் மலைப்பாங்கான வடக்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள Punggye-ri தளத்தில் ஆறு அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக நடத்தியதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய அரசாங்கம் தெரிவித்து வருகின்றன.
மேலும் 2018க்கு பிறகும் வட கொரியா ரகசியமான பல்வேறு அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத சோதனையால் பரவும் கதிரியக்க பாதிப்புகள் குறித்து சியோலை தளமாக கொண்ட மனித உரிமைகள் குழு செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனா, ஜப்பான் மற்றும் வட கொரிய மக்கள் பாதிப்பு
செவ்வாய் கிழமை வெளியான அறிக்கையின் அடிப்படையில், வட கொரியர்கள், தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலத்தடி அணுசக்தி சோதனை தளத்தில் இருந்து நிலத்தடி நீரில் பரவும் கதிரிக்க பொருட்களால் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
1 மில்லியனுக்கும் அதிகமான வட கொரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள எட்டு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் கதிரியக்கப் பொருட்கள் பரவியிருக்கலாம் என்றும் இடைக்கால நீதி பணிக்குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
மேலும் வட கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வரப்படும் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருட்களில் ஓரளவுக்கு கதிரியக்க ஆபத்து இருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.