‘ஷியர்ஸ்’ அடித்துக் கொண்டு இஞ்சி டீ குடித்து ஜனாதிபதி பைடன், பிரதமர் மோடி கலகலப்பு
நேற்று நடைபெற்ற விருந்தில் ‘ஷியர்ஸ்’ அடித்துக் கொண்டு ஜனாதிபதி பைடனும், பிரதமர் மோடியும் இஞ்சி டீ குடித்து கலகலப்பாக பேசிக்கொண்ட தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்கா சென்ற பிரதமர்
3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்கா சென்ற மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
இச்சந்திப்பில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி ஒன்றையும், ஜில் பைடனுக்கு வைரக்கல்லான விநாயகர் சிலையை பரிசு கொடுத்தார்.
பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமை வாய்ந்த அமெரிக்க புகைப்பட கருவியையும் பரிசளித்தார்.
வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விதவிதமாக விருந்து கொடுத்தனர்.
ஜனாதிபதி பைடன், பிரதமர் மோடி கலகலப்பு
3-வது நாளான நேற்று அமெரிக்காவில் நடந்த பல நிகழ்ச்சிகளில் இந்திய பிரதமர் கலந்து கொண்டார். அப்போது, இளைஞர்கள் சிலர் புகழ் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு நடமாடினர்.
வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடந்த விருந்தில் ஜனாதிபதி பைடனும், இந்திய பிரதமர் மோடியும் இஞ்சி குளிர்பானத்தை கண்ணாடி குவளையில் நிரப்பி, இருவரும் ‘ஷியர்ஸ்’ அடித்து அருந்தினர்.
அப்போது, பைடன் நம்ம இரண்டு பேரும் மது அருந்துவதே இல்லையே... இதையாவது அருந்தலாமே என்று சிரித்துக் கொண்டு கூறினார். தற்போது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Prime Minister Narendra Modi raised a toast with US President
— sweetBhartiiye (@chatterchatru) June 23, 2023
Joe Biden at the state dinner in the White House and thanked him for his hospitality pic.twitter.com/2Y8nqjKwda
US President Joe Biden’s toast gets laughs at the state dinner for Indian Prime Minister Narendra Modi https://t.co/8R9NHt4H2U pic.twitter.com/QZBYzSRtws
— Reuters (@Reuters) June 23, 2023
PERSONAL DIARY: How I saw the frenzy inside the White House when iconic men of stature turned up.
— Rohan Dua (@rohanduaT02) June 23, 2023
ChatGPT creator Sam Altman, Mahindra boss Anand Mahindra, Google CEO Sundar Pichai, Tennis legend Billie Jean King attended Modi-Biden dinner at White House.
I report from DC pic.twitter.com/aztYhZJ6yx
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |