செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பு - நாசா வெளியிட்ட வீடியோ
செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பு தொடர்பான காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
நாசா
அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக நீண்ட இலக்குகளை வைத்துள்ள நாசா, சர்வதேச விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2030 களில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்காக செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
செவ்வாய் கிரகம்
இந்நிலையில் மார்ஸ் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் போன்ற ஆர்பிட்டர்களைப் பயன்படுத்தியும், அதி நவீன கேமேராக்களை பயன்படுத்தியும் செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பு படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின் காணொளியை வெளியிட்டுள்ள நிலையில், அந்த காணொளி குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த காட்சிகள் மக்களை ஈர்ப்பதற்காக மட்டுமல்லாமல், பாறை வடிவங்கள், அரிப்பு வடிவங்கள் மற்றும் வளிமண்டல நிலைமைகளைப் படிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் மனித பயணங்கள் மற்றும் ஆய்வுக்கான சாத்தியமான தரையிறங்கும் தளங்களை தீர்மானிக்க முடியும்.
NASA shared insane panoramic photos of Mars pic.twitter.com/Uxfr3DoPl7
— Pubity (@pubity) March 6, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |