பின்லாந்து, ஸ்வீடனின் நோட்டோ விண்ணப்பம்: 30 உறுப்பு நாடுகளும் இணைந்து வழங்கிய இன்ப அதிர்ச்சி!
மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைவதற்கான சேருதல் நெறிமுறைகளுக்கு அதன் 30 உறுப்பு நாடுகளும் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கிய பிறகு, ரஷ்யாவுடன் மிகப் பெரிய நிலப்பரப்பை பகீர்ந்து கொள்ளும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன.
இதற்கு நோட்டோவின் அமைப்பின் விட்டோ அதிகாரம் கொண்ட துருக்கி முதலில் மறுப்பு தெரிவித்து வந்தாலும், பின்னர் ஸ்வீடனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்மதம் தெரிவித்தது.
Just took part in historic NAC meeting where ?? and ?? accession protocols were signed by all NATO allies. Thank you for your support! Now the process of ratification by each of the Allies begins. Look forward to working together in ensuring our collective security. #WeAreNATO pic.twitter.com/9VNyBwk0Es
— Ann Linde (@AnnLinde) July 5, 2022
இந்தநிலையில், ஜூலை 5ம் திகதியான இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க NAC கூட்டத்தில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோ அமைப்பில் சேருவதற்கான நெறிமுறை விண்ணப்பத்திற்கு அமைப்பின் 30 உறுப்பு நாடுகளும் அனுமதி வழங்கியுள்ளது.
இதுத் தொடர்பாக நோட்டோ அமைப்பின் பொதுசெயலாளர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்த கருத்தில், ”பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நேட்டோவுக்கு இது உண்மையிலேயே வரலாற்று தருணம் எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் ஆன் லிண்டே ட்வீட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், நோட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கான நெறிமுறைகளில் 30 உறுப்பு நாடுகளும் சம்மதம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க NAC கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
One more important step forward. ⁰
— Finland at NATO (@FinMissionNATO) July 5, 2022
Today, #NATO Allies signed the Accession Protocols for ?? and ??. We want to extend a sincere thank you to all Allies.
The next step on the road towards membership is the ratification process in all national parliaments.
#FinlandNATO pic.twitter.com/lUHKBPkncy
உங்கள் ஆதரவிற்கு நன்றி, இதனைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நோட்டோவில் உறுப்பினர் ஆவது தொடர்பாக 30 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றத்தில் அனுமதி ஓப்புதலுக்கான நடைமுறை மிச்சம் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் நட்பு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆவலுடன் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ஜனாதிபதி புடினின் வேண்டுகோளை நிராகரித்த சீனா!
பின்லாந்தின் ஆதிகாரப்பூர்வ தூதுவர் தெரிவித்துள்ள கருத்தில், இன்னும் முக்கியமான படி ஒன்றை நோக்கி நாம் முன்னேற வேண்டி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.