தனது இரண்டு சகோதரிகளை வயிற்றில் சுமந்தபடி பிறந்த ஆண் குழந்தை: ஒரு அபூர்வ நிகழ்வு
தனது வயிற்றில் தனது இரண்டு சகோதரர்கள் அல்லது சகோதரிகளை சுமந்தபடி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு ஆகும்.
ஸ்கேனில் தெரியவந்த விடயம்
32 வயது கர்ப்பிணிப்பெண் ஒருவர், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான விடயத்தைக் கவனித்துள்ளனர்.
ஆம், அவரது வயிற்றிலிருந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன.
ஒரு அபூர்வ நிகழ்வு
இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் ஆகியுள்ளது.
அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அவர்.
அந்தக் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரண்டு குழந்தைகளின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளது தெரியவரவே, அறுவை சிகிச்சை மூலம் அந்த இரண்டு குழந்தைகளும் அகற்றப்பட்டுள்ளன.
தாயும் அந்த ஆண் குழந்தையும் நலமுடன் இருக்கும் நிலையில், அந்தக் குழந்தையின் வயிற்றிலிருந்த அந்த இரண்டு குழந்தைகளும் வளர்ச்சி அடையாததால் அவை உயிர் பிழைக்கவில்லை.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள், அந்த ஆண் குழந்தையுடன் இரட்டைக் குழந்தைகளும் உருவாகியுள்ளன.
அவை தாயின் வயிற்றுக்குள் வளர்வதற்கு பதிலாக, அவரது வயிற்றிலிருந்த இன்னொரு குழந்தையின் வயிற்றுக்குள் வளரத் துவங்கியுள்ளன.
மருத்துவ வரலாற்றிலேயே இப்படி ஒரு விடயம் நடப்பது இது 200ஆவது தடவையாம். இந்த அரிய நிகழ்வு , foetus in fetu என அழைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |