தன்னைதானே நைஜரின் தலைவராக அறிவித்துக்கொண்ட இராணுவ ஜெனரல்! பிரான்ஸ் எதிரிப்பு
இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, இராணுவ ஜெனரல் அப்துர்ரஹ்மான் சியானி (Gen. Abdourahmane Tchiani) தன்னை ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைவராக அறிவித்தார்.
நைஜரின் தலைவராக தன்னைதானே அறிவித்துக்கொண்ட ஜெனரல்
ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்ட நைஜர் அதிபர் முகமது பஸ்ஸூமின் (Mohamed Bazoum) பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தவர் அப்துர்ரஹ்மான் சியானி.
தேசிய தொலைக்காட்சி சேனலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அவரது தலைமையை அறிவித்துக்கிண்டார்.
AFP
தனது உரையில், நாடு வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்துள்ளதால் இராணுவ சதிப்புரட்சி அவசியமானது. இப்படியே தொடர முடியாது. நைஜரின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாளி நாடுகள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ள ஆதரவு தொடர வேண்டும் என்றும் சியானி கூறினார்.
பிரான்ஸ் எதிரிப்பு
1960-ல் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இப்போது வெளியேற்றப்பட்ட முகமது பாஸூம் நைஜரின் முதல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆவார். மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கையை முன்னெடுத்தவர்.
இதனிடையே, நைஜரின் அதிபராக மொஹமட் பாஸூமைத் தவிர வேறு யாரையும் அங்கீகரிக்க முடியாது என்று பிரான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டில் ஜனநாயக ஆட்சியை விரைவில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Niger declared their leader the new head of state, Niger general declares himself new leader, Niger News, Niger Coup, niger coup 2023