கப்பலின் சுக்கானில் 5,600 கி.மீ ஆபத்தான பயணம்... ஐரோப்பிய கனவு: புலம்பெயர்ந்த நால்வரின் நிலை என்ன?
சரக்கு கப்பல் ஒன்றின் சுக்கானில் உயிரை பணயம் வைத்து நான்கு நைஜீரிய நாட்டவர்கள் 14 நாட்கள் பயணித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5,600 கி.மீ தொலைவு பயணம்
குறித்த நால்வரையும் தென்கிழக்கு துறைமுகமான விட்டோரியாவில் பிரேசிலிய ஃபெடரல் காவல்துறையினர் மீட்டுள்ளனர். பயணம் தொடங்கிய 10 நாட்களில் அவர்கள் எடுத்துவந்த உணவும் தண்ணீரும் தீர்ந்து போக, கடல் நீரை குடித்தே மேலும் நான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
@Twitter
இந்த நால்வரும் ஐரோப்பிய கனவில் சுமார் 5,600 கி.மீ தொலைவு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தென்கிழக்கு துறைமுகமான விட்டோரியாவில் பிரேசிலிய ஃபெடரல் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர்.
வாழ்க்கையில் இதுவரை எதிர்கொள்ளாத ஆபத்தான சூழல் இது என குறிப்பிட்டுள்ள 38 வயது Matthew Yeye, உடல் முழுவதும் நடுக்கம், பயம் தொற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோரியுள்ளதாக தகவல்
ஐரோப்பா கனவுடன் கடந்த மாதம் அந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக கூறும் அந்த நால்வரும், உண்மையில் அட்லாண்டிக்கின் மறுபுறத்தில் பிரேசில் நாட்டில் தரையிறங்கியதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அந்த நால்வரில் இருவர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நைஜீரியா திரும்பியுள்ளனர். ஆனால், Matthew Yeye மற்றும் இன்னொருவர் பிரேசில் நாட்டில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
பிரேசில் நிர்வாகம் தங்கள் கோரிக்கையை ஏற்கும் என நம்புவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் மற்றும் அதிகரித்த குற்றச்செயல்கள் காரணமாகவே, நைஜீரியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 27ம் திகதி, மீனவர் ஒருவரின் உதவியில், சரக்கு கப்பலின் சுக்கானில் இடம்பிடித்துள்ளார் Matthew Yeye.ஆனால் இவருக்கு முன்பே, அந்த கப்பல் சுக்கானில் மூவர் காணப்பட்டுள்ளனர்.
கப்பல் ஊழியர்களால் கண்டுபிடிக்காமல் இருக்கவும், பயணத்தின் இடையே தொலைந்து போகாமல் இருக்கவும் அதன் பின்னர் போராடியதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |