இரவில் Bra அணிய வேண்டுமா., வேண்டாமா? இஸ்ரேலிய பெண்களுக்கு எழுந்த கவலை!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் எந்த நொடியிலும் வெடிக்கும் நிலை உள்ளது. இதனால், இஸ்ரேல் குடிமக்கள் எப்போதும் உயிர் பயத்தில் உள்ளனர்.
இப்போது ஈரானின் தாக்குதல் குறித்த அச்சம் இஸ்ரேல் குடிமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று இரவு பகலாக இஸ்ரேல் மக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலியப் பெண்களுக்கு வேறுவிதமான கவலை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
இஸ்ரேலிய பெண்கள் இரவில் பிரா அணியலாமா வேண்டாமா என்ற கவலையில் உள்ளனர்.
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் உண்மைதான். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
இஸ்ரேலிய பெண்களின் பிரச்சனை என்ன?
எதிரி ஏவுகணை அல்லது ரொக்கெட் தாக்குதல் நடத்தினால், சைரன் சத்தம் கேட்டவுடன் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓட வேண்டும். அவர்கள் அங்கு செல்ல சில வினாடிகள் ஆகும். அது அவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பான இடத்தை அடையவில்லை என்றால் மரணம் நிச்சயம்.
பொதுவாக பெண்கள் இரவில் தளர்வான ஆடைகளை அணிவார்கள். இரவு சைரன் ஒலிக்கும்போது சரியான உடைகள் மற்றும் ப்ரா அணிந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடுவது எளிதானது அல்ல.
சில இஸ்ரேலியர்கள் தங்கள் சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பாதுகாப்பான அறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் பழைய குடியிருப்புகள், பழைய கட்டிடங்களில் இந்த அமைப்பு இல்லை.
வெடிகுண்டுகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களுக்கு ஓட வேண்டும். படிக்கட்டுகளில் மறைந்து கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. ப்ரா இல்லாமல் தளர்வான ஆடைகளை அணியும் பெண்கள் சங்கடத்தை சந்திக்க நேரிடும். மறுநாள் அவர்களுடன் பழக வேண்டிய அவசியம் இருக்கும்.
இஸ்ரேலிய சமூக ஊடகங்களில் விவாதம்
இஸ்ரேலில் இரவில் ப்ரா அணிவதா இல்லையா என்பது குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய பெண்கள் இதில் ஆர்வமாக உள்ளனர்.
டெல் அவிவ் பெண் ஒருவர் இஸ்ரேலிய இராணுவ (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் இது குறித்து எந்த தகவலும் கூறவில்லையே. ப்ரா அணியவேண்டுமா அல்லது வேண்டாமா? என்று எழுதினார்.
ஈரான் தாக்குதல்
இஸ்ரேலியர்களின் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் மீண்டும் பேசியுள்ளது. இஸ்ரேலை அழிவிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் அப்துல் ரஹீம் மௌசவி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iran Israel war, Night-time bras or not, Israeli women’s dilemma wearing bras, Iranian attack