மோடியின் பெயரில் கார் நம்பர் பிளேட்: அமெரிக்காவில் வாழும் இந்தியரின் ஆச்சரியப்படுத்தும் செயல்
அமெரிக்காவில் வாழும் ராகவேந்திர ஶ்ரீனிவாஸ் என்ற நபர் தன்னுடைய காரின் நம்பர் பிளேட்டை இந்திய பிரதமர் மோடியின் பெயரில் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியை வரவேற்கும் பொருட்டு அந்த நாட்டின் அரசு சார்பிலும், இந்திய வம்சாவளியினர் சார்பிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் பெயரில் கார் நம்பர் பிளேட்
இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்திய பிரதமர் மோடியின் தீவிர ரசிகரான ராகவேந்திர ஶ்ரீனிவாஸ் என்ற நபர் தன்னுடைய ஹோண்டா காருக்கு மோடியின் பெயரை நம்பர் பிளேட்டாக வாங்கியுள்ளார்.
மேலும் இந்த காரில் சென்று அமெரிக்காவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | A 'fan' of PM Narendra Modi flaunts "NMODI" car number plate in Maryland, USA pic.twitter.com/AO5WRwdGoa
— ANI (@ANI) June 17, 2023
அத்துடன் வாழும் நாட்டிற்கும், இந்த உலகத்திற்கும் ஏதாவது நன்மை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்து வரும் மோடி தனக்கு மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தான் அமெரிக்காவுக்கு வருகை தரும் மோடியை வரவேற்பதற்காக தன்னுடைய காருக்கு மோடி என நம்பர் பிளேட் வாங்கியதாக ராகவேந்திர ஶ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
PM Modi an inspiration to me, says fan who flaunts 'NMODI' car number plate in US
— ANI Digital (@ani_digital) June 17, 2023
Read @ANI Story | https://t.co/kokW8QuuaM
#PMModi #US #Maryland pic.twitter.com/5hLclYEXLc
இதற்கிடையில் என்மோடி என்ற பதிவெண் கொண்ட ராகவேந்திர ஶ்ரீனிவாஸின் ஹோண்டா கார் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கார்களுக்கு அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நம்பர் பிளேட்டுகளை வாங்கி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |