கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வீச்சு! கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்
வடகொரியா இந்த ஆண்டு நடத்திய 7வது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை இதுவாகும்
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு பயிற்சிகளுக்கு இது வடகொரியாவின் பதிலடி என்று கூறப்படுகிறது
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்துள்ளது தென் கொரியா, ஜப்பானுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்துவதன் மூலம் தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன் தினம் வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. இதற்கு தென்கொரியா 3 ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா சோதித்த ஏவுகணைகளில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணை ஆகும்.
AP
பியாங்யாங் அருகில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, சுமார் 2000 கிலோ மீற்றர் உயரத்திற்கு சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 'வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனை ஒரு சீற்றம் மற்றும் முற்றிலும் மன்னிக்க முடியாது' என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார்.