2020 லாக்டவுனுக்குப் பிறகு முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் ஆசிய நாடு
2020 லாக்டவுனுக்குப் பிறகு முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் நுழைய வட கொரியா அனுமதித்துள்ளது.
கோவிட்-19 தொற்று பரவலின் போது உலகிலேயே மிகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை வட கொரியா விதித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலாப் பயணிகள் குழு வடகொரியாவுக்குச் சென்றனர்.
2020ல் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்காக எல்லை கட்டுப்பாடுகளை தொடங்கியதிலிருந்து வட கொரியாவிற்குள் அனுமதிக்கப்பட்ட முதல் சுற்றுலாப் பயணிகளாக இந்த ரஷ்ய குழு ஆனது.
வடகொரியா இன்னும் வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக திறக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக வடகொரியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.
பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட கோரியோ டூர்ஸின் பொது மேலாளர் சைமன் காக்கரெல், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஸ்கை ரிசார்ட்டுக்கு வருவது இதுவே முதல் முறை என்றார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோர் செப்டம்பர் மாதம் கிழக்கு ரஷ்யாவில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர்.
சர்வதேச தடைகளை மீறி பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ துறைகளில் ஒத்துழைக்க இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். கொரோனா தொற்று பரவுவதற்கு ஓராண்டுக்கு முன், வடகொரியாவில் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
North Korean leader Kim Jong Un, Russian President Vladimir Putin, North Korea Tourism, North Korea, Covid-19 Lockdown