ஜப்பான் கடல் பகுதியை தாக்கிய வட கொரிய ஏவுகணை: அமெரிக்காவை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு
வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் ஏவியதாக தென் கொரியாவின் கூட்டு படை தளபதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் இல் நினைவு தினம்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தை மற்றும் வட கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்-லின் 11ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி ஜிம் ஜாங் இல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
AP
கிம் ஜாங் இல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு வட கொரியாவின் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் அவரது வெண்கல சிலைகளுக்கு கீழ் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
வட கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், வட கொரியா ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியுள்ளது என தென் கொரியாவின் கூட்டு படை தளபதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையானது இந்த பிராந்தியத்தை அச்சுறுத்துவதுடன், அமெரிக்காவையும் அச்சுறுத்துவதாக சமீபத்தில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த வாரங்களில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பியோங்யாங் ஒரு "திட எரிபொருள் மோட்டார்" மூலோபாய ஆயுதத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்து இருந்தார்.
AP
வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள தென் கொரியா, எத்தகைய ஏவுகணை ஏவப்பட்டது என்ற தகவலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.