ஜப்பான் நோக்கி அடுத்தடுத்து பாய்ந்த வட கொரிய ஏவுகணைகள்: தயார் நிலையில் தென் கொரியா
வட கொரியா அடுத்தடுத்த மூன்று பால்டிக் ஏவுகணை ஜப்பான் கடலை நோக்கி ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணை
வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையின் சமீபத்திய நடவடிக்கையாக ஜப்பான் கடற்பரப்பை நோக்கி மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு வடகொரியா தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியது என்றும், அதனை தொடர்ந்து சுமார் 08:14 மணிக்கு இரண்டாவது மற்றும் அதிலிருந்து ஒரு நிமிடம் கழித்து மூன்றாவது ஏவுகணையும் ஏவியதாக தெரிவித்துள்ளது.
North Korea fired off at least two apparent ballistic missiles on Saturday, the final day of 2022, after a record-breaking year of launches. https://t.co/jHx3rdRihR
— The Japan Times (@japantimes) December 30, 2022
அத்துடன் ஜப்பான் கடலில் விழுந்த இந்த மூன்று ஏவுகணைகளும் தலைநகர் பியாங்யாங்கின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ஏவப்பட்டது என்றும், ஜப்பானின் கடற்பரப்பின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்து சுமார் 370 கி மீ தொலைவில் ஏவுகணைகள் விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஏவுகணைகளின் விமானப் பாதைக்கு அருகாமையில் இருந்த விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கைத் தகவல் வழங்கப்பட்டதாகவும், இதனால் இந்த நேரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் ஜப்பான் பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்று அறிவித்துள்ளது.
KCNA via Reuters
தயார் நிலையில் தென் கொரியா
இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தென் கொரியாவின் கூட்டுப் படை தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் நிலைமையை தங்கள் இராணுவம் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.
வட கொரியாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தொடர்ந்து, அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், எங்கள் ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது" என்று கூட்டுப் படை தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் வட கொரியா சுமார் 70 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.