அமெரிக்காவை தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகள்: விண்ணில் ஏவியது வட கொரியா!
அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை வட கொரியா ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஏவுகணை ஹொக்கைடோ-வின்(Hokkaido) மேற்கே 210 கிமீ தொலைவில் உள்ள கடல் பகுதியில் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை செலுத்தப்பட்ட அதே நாளில் குறைந்த தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
North Korea fires suspected intercontinental ballistic missile, lands near Japan https://t.co/943aEa8xA5 pic.twitter.com/hUGmEgtszN
— Reuters (@Reuters) November 18, 2022
வட கொரியாவுக்கு எதிரான வலுவான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தென் கொரியா உத்தரவிட்டு இருக்கும் நேரத்தில், வடகொரியாவின் இந்த ஏவுகணை செயல்பாட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கொரிய பிராந்தியத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ராணுவ பிரசன்னத்திற்கு "கடுமையான பதிலடி" கொடுக்கப்படும் என வியாழன் அன்று வட கொரிய FM Choe Son Hui எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ICBM உள்ளூர் நேரப்படி 10:15 மணிக்கு (02:15 GMT) வட கொரிய தலைநகர் பியாங்யாங் க்கு அருகில் இருந்து சுடப்பட்டதாக சியோலில் உள்ள இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் 50 ஏவுகணைகள்
இந்த ஏவுகணை அச்சுறுத்தலானது தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கம்போடியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிக் கொண்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வட கொரியா குறைந்தது 50 ஏவுகணைகள் வரை ஏவி அச்சுறுத்தியுள்ளது.
North Korea missile attack- வடகொரிய ஏவுகணை தாக்குதல்(Reuters)
இவற்றில் பெறும்பாலும் குறைந்த தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் என்றாலும், சில நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் சக்தி கொண்ட நீண்ட தூர ஏவுகணைகள் அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.