விமர்சனங்களுக்கு பதிலடி…வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் அதிரடி
வட கொரியாவின் உளவு செயற்கைக்கோளை கேலி செய்யும் விமர்சகர்களை ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் சகோதரி குப்பை என்று கடுமையாக சாடியுள்ளார்.
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள்
பியோங்காங்கின் சமீபத்திய கூற்றுப்படி, கடந்த வார இறுதியில் வட கொரியா இரண்டு ராக்கெட் ஏவுதல்களை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் வட கொரியா அதன் முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளுக்கான அமைப்புகளின் சோதனைகளை நடத்தி உள்ளது மற்றும் விண்வெளியில் இருந்து தென் கொரிய நகரங்களின் இரண்டு குறைந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களையும், பின்னர் வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிட்டது.
(AFP via Getty Image)
ஆனால் இந்த புகைப்படங்கள் மூலோபாய பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை என்றும், உளவு செயற்கைக்கோள் அறிவிப்பு வட கொரியாவின் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகளை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தென் கொரிய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கிம் ஜாங்-உன் சகோதரி கண்டனம்
வட கொரியா முதல் உளவு செயற்கைக்கோள் சோதனைகளை நடத்தி இருப்பதாக அறிவித்து இருக்கும் நிலையில், தரம் குறைந்த மோசமான செயற்கைக்கோள் அமைப்பு என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் உளவு செயற்கைக்கோள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ”குப்பை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
(Shutterstock)
அரசு நடத்தும் கொரிய மத்திய செய்தி நிறுவனத்திடம் பேசி அவர், விமர்சனங்களின் மதிப்பீடுகள் போதுமானதாக இல்லை மற்றும் விவேகமற்றவை என்று அவர்கள் நினைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இரண்டு பழைய ஏவுகணைகளை விண்வெளி ஏவுகணைகளாக மாற்றியமைத்ததாகக் கூறி வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் யோ-ஜோங் வெளியிடப்பட்ட படங்கள் மீதான விமர்சனங்கள்,"தீங்கிழைக்கும் இழிவு" மற்றும் "நாய் குரைத்தல்" என்று கிம் யோ-ஜாங் விவரித்துள்ளார்.
Kim Jong-un’s sister Kim Yo-jong கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங்(AP/REX/Shutterstock)
மேலும் அவர்கள் முட்டாள்தனமாக பேசுவதை நிறுத்தி, கவனமாக நடந்துகொள்வது மற்றும் இருமுறை யோசிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிம் யோ-ஜோங், வட கொரியாவின் அடுத்த தலைவர் என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.