வடகொரிய உளவாளிகள் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களில் ஊடுருவலாம்... கூகிள் அறிக்கையில் அம்பலம்
மென்பொருள் நிறுவன ஊழியர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு வடகொரிய உளவாளிகள் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களில் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிம் ஜோங் உன் அரசாங்கத்திற்காக
வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில், குடியிருப்பில் இருந்தே பணியாற்றும் வகையில் மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் பல ஊழியர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இவர்கள் போலியான அல்லது திருடப்பட்ட அடையாளம் காணும் ஆவணங்களைப் பயன்படுத்தி கிம் ஜோங் உன் அரசாங்கத்திற்காக வருவாய் ஈட்டுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியாக ஊடுருவும் வடகொரிய நபர்கள் அந்த நிறுவனத்தின் நிதி மற்றும் தரவுகளை திருடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிக்கையில், பிரித்தானியர்களே இப்படியான வடகொரிய உளவாளிகளுக்கு உதவுவதாக உளவுத்துறை அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கூகிள் அச்சுறுத்தல் அறிக்கை ஒன்றில், வடகொரிய உளவாளிகளுக்கு உள்ளூர் மக்களே பரிந்துரைப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இப்படியானவர்கள் வடகொரியாவில் இருந்து பணியாற்றும் நபர்களுக்கு நிறுவனத்தின் மொத்த ஆவணங்களையும் பார்வையிடும் அனுமதியையும் வழங்குகின்றனர்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கிய ஒரு மடிக்கணினி லண்டனில் இருந்து செயல்படுவதை கூகிள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது பிரித்தானியர் ஒருவர் இப்படியான சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை உறுதி செய்வதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் AI-உருவாக்கிய
கடந்த ஆண்டு நாஷ்வில்லில் வட கொரிய தொழிலாளர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் 38 வயதான மேத்யூ நூட் என்பவர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி அமெரிக்க குடிமக்களாக இருக்க நூட் வடகொரிய ஊழியர்களுக்கு உதவியதாகவும், நிறுவனத்தின் மடிக்கணினிகளை தனது வீட்டில் இருந்தே பயன்படுத்த வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் மக்களின் அடையாளங்களைப் பயன்படுத்தி, குடியிருப்பில் இருந்து பணியாற்றும் வாய்ப்பினை வடகொரிய உளவாளிகள் பெறுகின்றனர். நேர்காணல் கட்டத்தை அவர்கள் தாண்டியதன் பின்னர், அவர்கள் பெரும்பாலும் AI-உருவாக்கிய டீப்ஃபேக்குகளைப் பயன்படுத்தி, தங்களை உள்ளூர் மக்கள் போல தோற்றமளிக்க செய்கிறார்கள்.
இதற்கு என அவர்கள் மொத்தமாக 200 டொலர்கள் மட்டுமே செலவிடுகின்றனர். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர் என்றே நிபுணர்கள் தரப்பு இந்த விவகாரத்தில் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |