ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மீட்பு படையினர் செய்வது என்ன?
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூன்று ரயில்கள் மோதி விபத்து
ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் பெங்களுருவில் இருந்து கொல்கத்தா வந்து கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்டு இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதி மூன்றாவதாக விபத்தில் சிக்கிக் கொண்டது.
288 people died in the train accident in Balasore, Odisha, while more than 900 passengers were injured.
— Tamilnadu Temples (@TN_Temples_NGO) June 3, 2023
#OdishaTrain #Odisha#OdishaTrainTragedy #TrainAccident #OdishaTrainAccident #OdishaTrainMishap #odissatraincollapse #odishanews #OdishaForSports pic.twitter.com/lWYa8RhfDn
இதுவரை 288 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மீட்பு பணி தீவிரம்
இந்நிலையில் மிக பயங்கரமான இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற பொலிஸார், மீட்பு படையினர், உள்ளூர் பொதுமக்கள், மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.
3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக கிடைக்கும் நிலையில், அவற்றை வெட்டி எடுக்க மீட்பு படையினர் கேஸ் வெல்டிங் சாதனங்கள், மின்னணு துண்டிபான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் மீட்பு பணிகளில் 200 ஆம்புலன்ஸ்கள், 50 பஸ்கள், 45 நகரும் சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுடன் 1200 பேர் விபத்து நடந்த பகுதியை சுற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஒடிசா அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெரிசல்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைத்து விதமான வாகனங்களின் உதவி மூலமாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 teams of NDRF involved in the rescue operation.
— Simran (Journalist)✨ (@simi2214) June 3, 2023
NDRF and other agencies continue with the rescue work that could last upto 3 hours says Odisha Chief Secretary #train_accident #TrainMishap #Train #Odisha #OdishaTrainAccident #OdishaTrainTragedy #OdishaTrain #TrainTragedy pic.twitter.com/oIIdDBP9AU
நொறுங்கிய ரயில் பெட்டிகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்க மீட்பு படையினர், கேஸ் கட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு விபத்து எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உதவிக்கரம் நீட்டும் உள்ளூர் மக்கள்
இந்நிலையில் ரயில் விபத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் வழங்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு உள்ளூர் மக்கள் குவிந்துள்ளனர்.
#BalasoreTrainAccident | "I was nearby when this accident happened, we rescued around 200-300 people," says Ganesh, a local #OdishaTrainAccident pic.twitter.com/d8PkJNEPRY
— ANI (@ANI) June 3, 2023
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் வழங்கி அவர்களின் உடமைகளை மீட்டெடுத்து தருவதாக ரயில் பயணிகளில் ஒருவர் ரூபம் பானார்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.