9 லட்சம் வாகனங்கள் விற்று சாதனை - இந்தியாவின் முன்னணி EV நிறுவனமாக உருவெடுத்த OLA
9 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்று, OLA Electric இந்தியாவின் முன்னணி EV நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஓலா நிறுவனம் 2021 இறுதியில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைந்தது.
2025 ஜூன் மாத முடிவில் 9.18 லட்சம் வாகனங்களை விற்று இந்த சாதனையை அடைந்த முதல் இந்தியா நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது.
2022-ல் 1.ஓ லட்சம் வாகனங்களை விற்று Ather, TVS நிறுவனங்களை விஞ்சியது.
2023-ல் 2.67 லட்சம் வாகனங்களை விற்று 144 சதவீதம் வளர்ச்சியடைந்தது.
2024-ல் 4.07 லட்சம் வாகனங்களை விற்று ஒட்டுமொந்த இந்திய இருசக்கர மின்வாகன விற்பனையில் 35 சதவீத பங்கை எட்டியது.
இப்போது 2025-ல் (ஜனவரி முதல் ஜூலை வரை) 1.33 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 51 சதவீதம் குறைவு.
Ola-வின் பெயர்பெற்ற மொடல்கள்:
Ola S1 - 14 வகைகளில் ரூ.65,000 முதல் ரூ. 1.7 லட்சம் வரை விற்கப்படுகின்றன.
Ola S1 Pro - 4kWh பேட்டரி, 142 கி.மீ. Range. இதன் விலை ரூ.1.54 லட்சம்.
Roadster X - 11kWh சக்தி, மணிக்கு 125 கி.மீ. வேகம், 501 கி.மீ Range. ICE வாகனங்களை விட 15 மடங்கு செலவு குறைவு.
Ola-வின் சாதனைகள்
ஒரே ஆண்டில் 4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த முதல் நிறுவனம்
2024 மார்ச் மாதம் 53,647 வாகனங்கள் விற்று மாதாந்திர சாதனை
வரும் ஆகஸ்ட் 15 அன்று India Inside திட்டம் அறிமுகம்.
இந்தியாவில் மற்ற EV இருசக்கர வாகன விற்பனையாளர்களான TVS 6.06 லட்சம், Bajaj Auto 4.59 லட்சம், Ather Energy 4 லட்சம், HeroVida 1 லட்சம் வாகனங்களை விற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
OLA Electric Record, Indian EV Maker, Electric Scooters sales in India, highest Sold Electric Scooters in India, Ola S1, Ola Electric Scooters