இராணுவ ஆட்சியில் இருக்கும் நாடொன்றிற்கு ஆபத்தான ஆயுதங்களை விற்க பாகிஸ்தான் ஒப்பந்தம்
இராணுவம் ஆட்சி செய்யும் ஆப்பிரிக்க நாடொன்றிற்கு பாகிஸ்தான் ஆபத்தான ஆயுதங்களை விற்கவுள்ளது.
பாகிஸ்தான் சூடானின் இராணுவ ஆட்சிக்குழுவுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், சூடானின் SAF (Sudanese Armed Forces) படைக்கு பல்வேறு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளது.
இதில் இலகுரக தாக்குதல் விமானங்கள், என்ஜின்கள், கவச போர் வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவை அடங்கும்.
இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர், விமானப்படைத் தலைவர் மற்றும் SAF விமானப்படைத் தலைவர் ‘Pilot’ El Tahir Mohamed El Awad El Amin ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின்போது கையெழுத்தானது.
SAF விமானப்படை, கடந்த காலங்களில் சூடானில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஐ.நா. மற்றும் சுவிட்சர்லாந்து அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது ஆயுத ஏற்றுமதியை விரிவுபடுத்த முயல்கிறது. ஆனால், இதுசர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளில் சிக்கலைகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan Sudan arms deal, Sudan junta weapons purchase, Pakistan defense exports, Sudan conflict weapons supply, Pakistan drone export