கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை காலுறைக்குள் வைத்து கடத்திய விமான பணிப்பெண்
ரூ.1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த விமான பணிப்பெண் சிக்கினார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்திச் சென்றபோது பிடிபட்டார்.
விமானப் பணிப்பெண் தனது காலுறைகளில் நிறைய அமெரிக்க டொலர்களையும் சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விமானப் பணிப்பெண்ணின் காலுறையில் இருந்து விசாரணை முகமை ஊழியர்கள் இந்த கரன்சியை வெளியே எடுக்கும் காட்சிகள் உள்ளன.
பாகிஸ்தான் செய்தித்தாள் Dawn செய்தியின்படி, விமானப் பணிப்பெண் சனிக்கிழமை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
அந்த அறிக்கையின்படி, விமானப் பணிப்பெண்ணிடம் இருந்து 1,40,000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் சுங்கத்துறை ராஜா பிலால் தெரிவித்துள்ளார்.
இதன் மதிப்பு இலங்கை ரூபாவில் சுமார் 1 கோடியே 13 லட்சம் ஆகும்.
PIA Air Hostess Caught Taking Riyals Inside Clothes? #airhostess pic.twitter.com/DTtfrTDpZU
— Muhammad Amir Arain (@Muhamma54917525) July 28, 2024
விமானப் பணிப்பெண் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை தேடி வந்த அதிகாரிகள், விமானப் பணிப்பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
விமானப் பணிப்பெண்ணுக்கு எதிரான எப்ஐஆரில் அவரது பெயர் AQ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் லாகூரில் இருந்து ஜெட்டா செல்லும் PIA விமானம் எண் PK 203-இல் இருந்ததாக புகார் கூறுகிறது.
விமானப் பணிப்பெண் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு விமானப் பணிப்பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார் என்று PIA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan Air Hostess, Foreign Currency, Pakistan airline crew member caught smuggling Saudi currency in socks, Saudi currency, Saudi Riyal