நவம்பர் 1ஆம் திகதிக்குள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரும் வெளியேற இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நாடு...
நவம்பர் 1ஆம் திகதிக்குள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற, அந்நாடு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாமாக வெளியேற முன்வருவோருக்கு உதவி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தாமாகவே பாகிஸ்தானைவிட்டு வெளியேற முன்வரும் நிலையில், அவர்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பதில் உதவி செய்து, பணப்பரிமாற்றத்துக்கு அனுமதியளித்து, அவர்களுடைய பயணத்துக்கும் உதவி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மறுப்போர் வெளியேற்றப்படுவார்கள்
தாமாக வெளியேற முன்வராமல், நாட்டைவிட்டு வெளியேற மறுப்போர், நவம்பர் 1ஆம் திகதிக்குப் பின் அதிகாரிகளால் வெளியேற்றப்படுவார்கள் என்றும், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள், அவர்களைக் குறித்த தரவுகள் அரசிடம் உள்ளன என்று உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் Sarfraz Bugti தெரிவித்துள்ளார்.
The Times of India
அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மறைந்துகொள்ள உதவுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் அவர்.
திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்?
1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் ஆப்கனுக்குள் ஊடுருவியதைத் தொடர்ந்து, ஏராளமான ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.
அதன் பின், பல்லாயிரக்கணக்கான ஆப்கன் நாட்டவர்கள் போருக்குத் தப்ப பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்தனர். ஆனால், சமீப காலமாக எல்லையில் மோதல்கள் நடந்துவருவதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Hindustan Times
கடத்தல், இந்த ஆண்டு பாகிஸ்தானில் நிகழ்ந்த 24 மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 14 உட்பட பாகிஸ்தான் அரசுக்கெதிரான தாக்குதல்கள் என, ஆப்கன் நாட்டவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதையடுத்து இம்மாதம், அதாவது நவம்பர் மாதம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |