பாகிஸ்தானில் பயங்கர ரயில் விபத்து: 30 பேர் பலி 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாகிஸ்தானில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சமாக 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தடம் புரண்ட ரயில்
பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் நவாப் ஷா நகருக்கு அருகே ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தடம்புரண்டது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்த போது ஹசரா எக்ஸ்பிரஸ்(Hazara Express) தடம் புரண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தண்டவாளத்தில் இருந்து 10 பெட்டிகள் தடம் புரண்டு வெளியேறி இருப்பதாகவும், இந்த ரயில் விபத்தில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன் 60 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரகால நிலை அறிவிப்பு
இந்நிலையில் பாகிஸ்தானின் நவாப் ஷா மற்றும் சுக்கு மருத்துவமனைகளில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ہزارہ ایکسپریس ٹرین کی بوگیاں الٹ گئیں ۔۔۔ ایک میرے ملک کے غربت کے مارے ہوئے لوگ ۔۔۔ اور دوسرا سارے سانحات بھی انہی کے حصے میں #HazaraExpress pic.twitter.com/JBDPsY9OvB
— Shehr Bano Official (@OfficialShehr) August 6, 2023
ரயில்வே துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு படையினர் விரைந்து அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |