பள்ளி பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி: கொல்லப்பட்ட 8 வயது சிறுமி
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெண்கள் பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், திடீரென பாடசாலை பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி கொல்லப்பட்டார்.
பாடசாலை பேருந்து மீது துப்பாக்கி சூடு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பெண்கள் பாடசாலை மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல்கள் இருந்த நிலையில் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் அதிகாரி ஆலம் கான், பாடசாலையில் இருந்து வெளியேறிய பள்ளி பேருந்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
DAWN
இதில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில், நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி
இந்த எதிர்பாராத சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி நசீர் சத்தி வழங்கிய தகவலில், பொலிஸ் அதிகாரி ஆலம் கானை எந்த காரணம் துப்பாக்கி சூடு நடத்த தூண்டியது என்று தெரியவில்லை, ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Tribune
ஸ்வாட் பள்ளத்தாக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தாலிபான்களின் கோட்டையாக திகழ்ந்தது.
கடந்த 2019 ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பகுதி தீவிரவாத குழுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.