அமெரிக்க நிறுவனத்துடன் பாகிஸ்தான் 500 மில்லியன் டொலர் ஒப்பந்தம் - கடனிலிருந்து மீள முயற்சி
பாகிஸ்தான் அமெரிக்காவைச் சேர்ந்த US Strategic Metals (USSM) நிறுவனத்துடன் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானின் முக்கிய கனிம வளங்களை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Missouri-ஐ தலைமையிடமாகக் கொண்ட USSM நிறுவனம், பாகிஸ்தானின் Frontier Works Organization (FWO) உடன் இணைந்து பாலி-மெட்டாலிக் சுத்திகரிப்பு (Ploy-Mettalic Refinery) நிலையத்தை நிறுவுவதற்கும் , கூட்டு சுரங்க திட்டங்களை தொடங்குவதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பின் வந்த முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
USSM நிறுவனம், உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சுத்தமான ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கு தேவியான கனிமங்களை சுத்திகரிக்கவும் மறுசுழற்சி செய்யவும் நிபுணத்துவம் பெற்றது.
பாகிஸ்தான் தனது நிலத்தில் ட்ரில்லியன் டொலர் மதிப்புள்ள கனிம வளங்கள் இருப்பதாக முன்பே தெரிவித்திருந்தது. இந்த முதலீடு, பாகிஸ்தானின் நீண்டநாள் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், வெளிநாட்டு கடனிலிருந்து விடுபடவும் உதவும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan US mineral deal, 500 million dollar investment Pakistan, US Strategic Metals Pakistan, Pakistan rare earth elements, Pakistan FWO mining projects, US-Pakistan trade pact, Pakistan economic recovery minerals