16 வயதில் சிறைபிடிக்கப்பட்டு 24 வயதில் விடுதலையான பாலஸ்தீனிய பெண்
இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன பெண் சிறையில் இருந்த கடினமான சூழல் குறித்து பேசியுள்ளார்.
8 ஆண்டுகால சிறை
கத்தாரின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ் 13 ஹமாஸ் கைதிகளுக்கு ஈடாக 39 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட 39 பேரில் மாரா பகீரும் (Marah Bakeer) ஒருவர். இவர் தனது 8 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் இருந்து திரும்பியிருக்கிறார். மாராவின் தாய் சவ்சன் (Sawsan) தன் மகளைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ''மாரா அழகாக இருக்கிறாள் என்று நான் சொன்னேன். அவள் என் மகள் என்பதால் அல்ல, ஆனால் மாரா அழகாக இருக்கிறாள், நீங்களே அதை பார்க்க வேண்டும்'' என கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் மாரா வீட்டிற்கு செல்லும்போது ஒரு இஸ்ரேலிய அதிகாரியைக் குத்த முயன்றதாகக் கூறி இஸ்ரேலிய படைகள் அவரை சுட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் அதில் உயிர் தப்பினாலும், கை மற்றும் தோள் பட்டையில் காயங்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாராவுக்கு 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நான்கு மாதங்களில் அவரது தண்டனை காலம் முடிவடையும் நிலையில் பிணைக்கைதிகளுடன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
என் தாயின் அன்பு தேவைப்பட்டது
இந்த நிலையில் சிறையில் இருந்தது குறித்து பேசிய மாரா பகீர், தனது சிறையில் இருந்த காலம் கடினமாக இருந்தது எனவும், ஆனால் கடவுள் மீதான நம்பிக்கையாலும், தனது குடும்பத்தினர் மற்றும் சக பாலஸ்தீனிய கைதிகளின் ஆதரவாலும் அதைத் தாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
காசாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தபோது கவனம் ஈர்த்த குழந்தை: பாட்டியை சந்திக்கும் நெகிழவைக்கும் காட்சிகள்
மேலும் அவர், 'சிறையில் பல கடினமான நேரங்கள் இருந்தன, ஆனால் செல்லும் மற்றவர்களைப் போலவே வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும். சிறை மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் நான் இளமையாக இருந்தேன். எனக்கு என் தாயின் அன்பும் எனது குடும்பத்தின் ஆதரவும் தேவைப்பட்டது.
என்னைப் பராமரித்து எனக்கு உதவி செய்ய சக கைதிகள் பலர் இருந்தாலும், தாயின் அன்பை எதுவும் மாற்ற முடியாது' என உருக்கத்துடன் கூறினார். முன்னதாக, இஸ்ரேலியா அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை பகீரும் அவரது குடும்பத்தினரும் மறுத்தனர்.
Mahmoud Illean/AP Photo
[Faiz Abu Ramleh/Al
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |