ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த ஒலிம்பிக் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 வீரர்களுக்கு கொரோனா தொற்று
உலகளாவிய நிகழ்வு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்சின் தலைநகரில் (பாரிஸ்) நடைபெறவுள்ளது.
இறுதியாக பிரான்ஸ் நாட்டில் 1924 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. அதையடுத்து 100 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பிரான்ஸிற்கு வருகை தரவுள்ளனர்.
அதில் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு வீரருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து வாட்டர் போலோ விளையாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பின் அவருடன் தொடர்பில் இருந்த தடகள வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில், கொரானா பரவல் ஏற்படுமா? என்ற அச்சம் மக்களிடையில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |