அந்தரத்தில் சுழன்று நெருப்பு கோளமான பயணிகள் விமானம்: நிபுணர்கள் கூறும் பின்னணி
பிரேசில் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று அந்தரத்தில் சுழன்று தரையில் விழுந்து 62 பேர்கள் பலியான விபத்தில், அதன் பின்னணி காரணம் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
கோர விபத்தில் சிக்க காரணம் ஐஸ்
விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, விசாரணை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். இந்த நிலையில், Celso Faria என்ற விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
தொடர்புடைய விமானம் அந்தரத்தில் சுழன்று கோர விபத்தில் சிக்க காரணம் ஐஸ் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். பனி உறைந்து இறக்கைகள் மற்றும் ப்ரொப்பல்லர் பிளேடுகளில் தங்கலாம்.
இது ஒருகட்டத்தில் விமானத்தின் செயல்திறனைத் தடுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னொருவர் தெரிவிக்கையில், பனி உறைந்து காணப்பட்டாலும், அது விமானம் பறக்க தடையாக இருப்பதில்லை என்றார்.
இதனிடையே, கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். கருப்பு பெட்டி என பரவலாக அறியப்படும் ஆரஞ்சு நிறத்திலான இரு பெட்டிகளில் விமானியின் அறையில் குரல் பதிவுகளும், விமானத்தின் அதுவரையான அனைத்து தரவுகளும் அதில் பதிவாகும்.
தற்போது அந்த பெட்டிகள் மீட்கப்பட்ட நிலையில், அடுத்த 30 நாட்களில் ஆய்வுகளை முடித்து, விபத்துக்கான உண்மையான காரணம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதில் இருந்து மீண்டு வருவது கடினம்
மேலும், பனி தான் விபத்துக்கு காரணம் என்பதை தற்போது உறுதி செய்ய முடியாது என்றும், மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விமானமானது பனிப்பொழிவு மிகுந்த பல நாடுகளில் பயணப்பட்டுள்ளது.
பிரேசில் போன்ற காலநிலை அல்லாத பல நாடுகளுக்கும் பயணப்பட்டுள்ளது. அதனால், பனி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என உறுதியாக தற்போது கூற முடியாது என்றார்.
இயந்திர கோளாறு காரணமாக பேரழிவு ஏற்பட்டிருக்கலாம், அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு நிபுணர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பயணிகள் விமானமானது அந்தரத்தில் சுழலத் தொடங்கினால், அதில் இருந்து மீண்டு வருவது கடினம் என்றார். விமானியின் தவறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4,500 மணி நேரம் அவருக்கு விமானம் செலுத்திய அனுபவம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |